வாணியம்பாடி அருகே உள்ள நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 55). விவசாயியான இவர், கடந்த வியாழக்கிழமை இரவு, தனது வீட்டின் நுழைவு வாயிலில் நின்றிருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அவரைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த வேலாயுதம், மயக்கமான நிலையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் அவரது மார்பு, முகத்தாடை பகுதிகளில் பாய்ந்திருந்த இரண்டு குண்டுகளை மருத்துவர்கள் அகற்றினர். மேலும், அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்ஃபோனிலும் இரண்டு குண்டுகள் பாய்ந்திருந்தன. தகவலறிந்து திம்மாம்பேட்டை காவல் துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் விவசாயி வேலாயுதம் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டது தெரிய வந்தது.