குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியைச் சேர்ந்தவரான அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமாரின் வீடு, நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் உள்ளது. அவரது குடும்பத்தினர் அங்கு வசித்து வரும் நிலையில், விஜயகுமார் தற்போது டெல்லியில் உள்ளார்.
இந்நிலையில், இன்று காலை விஜயகுமாரின் வீட்டின் முன்பு சந்தேகத்திற்கு இடமாக பிளாஸ்டிக்கால் ஆன ஐஸ்கிரீம் பந்து காணப்பட்டது. இதனால் குழப்பமான விஜயகுமாரின் குடும்பத்தினர் உடனே காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்து அவர்கள் சோதனையிட்டபோது வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட நாட்டு வெடிகுண்டு பந்து வடிவில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.