தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

புதுச்சேரியில் ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் ஓட ஓட வெட்டிக் கொலை! - காவல்துறை விசாரணை

புதுச்சேரியில் ஒப்பந்ததாரர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்துள்ளது.

பட்டப்பகலில் வெட்டிக் கொலை
பட்டப்பகலில் வெட்டிக் கொலை

By

Published : Oct 15, 2020, 5:01 AM IST

புதுச்சேரி:சுமைத் தூக்கும், இறக்கும் ஒப்பந்ததாரர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மேட்டுப்பாளையம் தர்மாபுரியை சேர்ந்தவர் ஜீவா. மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் சுமைத் தூக்கும், இறக்கும் ஒப்பந்ததாரராக இருந்துவரும் இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று (அக்.14) காலை ஜீவா இருசக்கர வாகனத்தில் தனது அலுவலகத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றுள்ளார்.

பட்டப்பகலில் வெட்டிக் கொலை

மேட்டுப்பாளையம் மின்துறை அலுவலகம் அருகே அவர் சென்றபோது நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளனர். அப்போது தப்பிக்க முயற்சி செய்த அவரை அந்த கும்பல் சுற்றி வளைத்துள்ளனர்.

உடனே இருசக்கர வாகானத்தை விட்டு இறங்கி ஓடியபோது அந்த கும்பல் அவரை விரட்டி சென்று தலையில் வெட்டியுள்ளனர். இதில் அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அந்த கும்பல் அவரது கையை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்பு உயிருக்குப் போராடி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட ஜீவா இதற்கு முன் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் கான்ட்ரக்டில் வேலை பார்த்து வந்துள்ளார். பின் அவரிடமிருந்து பிரிந்து தனியாக கான்ட்ராக்ட் எடுத்து ஆட்களை வைத்து வேலை பார்த்துள்ளார். இவருக்கு அரசியல் பின்புலம், ரவுடிகள் சிலரின் தொடர்பும் இருந்ததால் வெகு விரைவில் வீடு கட்டி வசதிகளை பெருக்கிக்கொண்டுள்ளார்.

இதனால் அவருக்கு தொழிலில் சிலருடன் போட்டி இருந்துள்ளது. அதுமட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள ரவுடிகள் இவரிடம் மாமூல் கேட்கும்போது இவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ரவுடிகள் தரப்பில் இவருக்கு பகை ஏற்பட்டுள்ளது. தொழில்போட்டியால் அவரை கொலை செய்தனரா? அல்லது மாமூல் தராத காரணத்தினால் கொலை நடைபெற்றதா? என்ற இரு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details