தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்: 9 பேருக்கு போலிஸ் வலைவீச்சு! - தமிழ் குற்ற செய்திகள்

விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே விவசாய நிலத்தில் மறைத்துவைத்திருந்த 400 லிட்டர் எரிசாராயத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சாராயம் காய்ச்சிய ஒன்பது நபர்களைத் தேடிவருகின்றனர்.

Confiscation of 400 liters of kerosene; Police blog for 9 people!
Confiscation of 400 liters of kerosene; Police blog for 9 people!

By

Published : Jul 29, 2020, 1:54 AM IST

Updated : Jul 29, 2020, 2:01 AM IST

விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் இன்று (ஜூலை 28) அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையின்போது அங்கிருந்த விவசாய நிலத்தில் சுமார் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பேரல்களில், 400 லிட்டர் எரிசாராயம் மறைத்துவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அதனைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், அவற்றை மண்ணில் கொட்டி அழித்தனர்.

மேலும் இதுதொடர்பாக வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், ஏழுமலை, செல்வகுமார், தாமரை செல்வம், சம்பத், நாராயணன், லக்ஷ்மணன், சரவணன், சுப்பிரமணியன் ஆகிய ஒன்பது பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Last Updated : Jul 29, 2020, 2:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details