தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பாஜக மாவட்ட தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்! - விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம்: பாஜக மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் காயத்திரி, பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

Sexual abuse
Sexual abuse

By

Published : Nov 21, 2020, 10:06 AM IST

விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருபவர் காயத்திரி. கண்டாச்சிபுரம் பகுதியை சேர்ந்த இவர் விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலியவரதன் மீது பாலியல் புகார், பண மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை தெரிவித்து பாஜக தலைமைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், "நான் விழுப்புரம் மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளராக உள்ளேன். எனக்கு மாவட்ட தலைவி பொறுப்பு வாங்கி தருவதாக கூறி விழுப்புரம் மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலியவரதன் ரூ.5 லட்சம் பணம் பெற்றுள்ளார். மேலும் என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து வருகிறார்.

என்னைப் போன்று பல பெண்களின் வாழ்க்கையில் அவர் விளையாடுகிறார். எனவே, அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் விழுப்புரம் மாவட்ட பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details