தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

குமரியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது. - குமரி குற்றச்செய்திகள்

குமரி மாவட்டம் தக்கலை சுற்று வட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது
கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது

By

Published : Jan 10, 2021, 4:55 AM IST

கன்னியாகுமரி:குமரி மாவட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் மூலச்சல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான அஜி மோன் (21), ரூஸ்வான் (19) ஆகிய இருவரையும் காவலர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவர்கள் இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் சக மாணவர்கள் மற்றும் வெளியே உள்ள நபர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து தக்கலை காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஒட்டன்சத்திரத்தில் காதலி கொலை...! காதலன் உள்பட இருவர் கைது...!

ABOUT THE AUTHOR

...view details