தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பிறந்த குழந்தையை விற்ற அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு! - அரசு மருத்துவர்

பிறந்த குழந்தையை விற்பனை செய்ததாக, அரசு மருத்துவர் மற்றும் இரு செவிலியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

By

Published : Dec 2, 2020, 5:05 PM IST

சிக்கமகளூரு (கர்நாடகா): காதலன் கைவிட்ட நிலையில், பிறந்த குழந்தையை அரசு மருத்துவர் வேறொருவருக்கு விற்பனை செய்துவிட இளம்பெண் ஒருவர் நிர்கதியாகியுள்ளார்.

கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர மனஅழுத்தம் இருந்தது.

இதனால் பித்து பிடித்தால்போல் காணப்பட்டார். இந்நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது, அவர் தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இப்பெண் இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இந்தக் காதல் வரம்பு மீறவே இவர் கர்ப்பம் தரித்துள்ளார். இந்நிலையில் காதலன் இவரை கரம்பிடிக்க மறுத்துவிட்டார்.

எனினும் தனது வயிற்றில் வளரும் குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க இப்பெண் விரும்பியுள்ளார். பிரசவ காலத்தில் மருத்துமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். அங்குதான் இப்பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

இவருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் பாலகிருஷ்ணன் குழந்தை இறந்து பிறந்தது எனக் கூறி, பிரசவத்துக்கு பிறகு பெண்ணை அனுப்பிவைத்துவிட்டார். ஆனால், நலமாக பிறந்த குழந்தையை மருத்துவர், இரு செவிலியர் உதவியுடன் வேறொரு நபருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது.

பிறந்த குழந்தையை விற்ற அரசு மருத்துவர் மீது வழக்குப்பதிவு!

தற்போது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் அரசு மருத்துவர், செவிலியர் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் இச்சம்பவம் குறித்து பேசுகையில், “நான் கர்ப்பம் தரிக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள். மற்றவர்கள் என் குழந்தை இறந்து பிறந்தது என்கிறார்கள்” என்றார் சோகமாக!

இதையும் படிங்க: வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு - மருத்துவர் உள்பட இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details