தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

நிர்பயா வழக்கு: தலைமை நீதிபதி பாப்டே விலகல்! - Chief Justice of India bobde releaved

டெல்லி: நிர்பயா வழக்கின் சீராய்வு மனு மீதான விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகுவதாக அறிவித்துள்ளார்.

Chief Justice of India bobde releaved, தலைமை நீதிபதி பாப்டே விலகல்
nirbhaya case Chief Justice of India bobde releaved

By

Published : Dec 17, 2019, 2:58 PM IST

நிர்பயா வழக்கில் குற்றவாளி தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெறவிருந்த நிலையில், அந்த அமர்வில் இருந்த தலைமை நீதிபதி பாப்டே இவ்வழக்கை விட்டு தன்னை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த மனுவின் மீதான விசாரணை நாளை காலை 10.30 மணிக்கு வேறு அமர்வில் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா வழக்கில் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார், தன்னுடைய மரண தண்டனையை மறுசீராய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று நடைபெறவிருந்தது..

குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்!

2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான ஆறு நபர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் என்பதால் விடுதலை செய்யப்பட்டார். திகார் சிறையிலிருந்த மற்றொருவரான ராம்சிங் 2013ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.

நிர்பயா குற்றவாளிகளை விரைவாக தூக்கிலிடுங்கள்: தாயார் வேண்டுகோள்!

எஞ்சியுள்ள நால்வரான முகேஷ், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதில், அக்‌ஷய் குமார் தவிர மற்ற மூவரின் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இச்சூழலில், அக்‌ஷய் குமார் தரப்பு வழக்கறிஞர் ஏ.பி. சிங்கும் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

நிர்பயா வழக்கு: கருணை மனுவை நிராகரிக்க தாயார் கோரிக்கை!

அக்‌ஷய் குமாரின் மனுவில் அரசை கேலி செய்வதைப் போல குறிப்பிட்டிருந்தார். அதில், காற்று மாசுபாட்டால் பெரும்பான்மை மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எங்களை ஏன் தூக்கிலிட வேண்டும் என்ற நக்கல் தொனியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிர்பயா வழக்கு: குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பிய வினய் சர்மா!

ABOUT THE AUTHOR

...view details