தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பிரபல பாடகர் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட பெண்கள்: காவல் துறையில் புகார்! - பாடகர் புஸ்பவனம் குப்புசாமி செய்தி

சென்னை: வீட்டு வேலை பார்க்கவந்த பெண்களை வீட்டில் அடைத்துவைத்து மிரட்டியதாக பிரபல திரைப்பட பாடகரான புஸ்பவனம் குப்புசாமி மீது காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள்: காவல் துறையில் வழக்கு!
பிரபல பாடகர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட பெண்கள்: காவல் துறையில் வழக்கு!

By

Published : Dec 8, 2020, 2:20 PM IST

சென்னை அபிராமபுரம் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்த ஜெயந்திக்கு (43) 17 மற்றும் 18 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி தனது இரண்டு மகள்களையும் அண்ணாமலை புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பிரபல திரைப்பட பாடகரான புஸ்பவனம் குப்புசாமி வீட்டில் வீட்டு வேலைக்காக நான்கு நாள்களுக்கு முன்பு பணி அமர்த்தியுள்ளார். அவர்களுக்கு மாத சம்பளம் 8000 ரூபாய் எனவும், ஞாயிற்றுகிழமையில் வேலைக்கு வந்தால் 300 ரூபாய் கையில் தருவதாகப் பேசி பணியமர்த்தப்பட்டனர்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு பெண்களும் வழக்கம்போல் குப்புசாமி வீட்டிற்கு வேலைக்கு வந்துள்ளனர். வேலை முடிந்து பின்னர் புஷ்பவனம் குப்புசாமி பேசிய தொகைக்கு மாறாக 100 ரூபாய் குறைத்து 200 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இரு பெண்களும் 100 ரூபாய் குறைத்து கொடுத்தது தனது தாய் மற்றும் நண்பர்களிடம் புலம்பினர்.

இதனை அறிந்த புஷ்பவனம் குப்புசாமி நேற்று பணிக்கு வந்த இரு பெண்களையும் வீட்டில் அடைத்துவைத்து எங்களைப் பற்றி எப்படி வெளியில் தவறாகப் பேசலாம் என மிரட்டிவந்துள்ளார். நீண்ட நேரமாகியும் வேலைக்குச் சென்ற மகள்கள் வீட்டிற்கு வராததால் ஜெயந்தி, புஷ்பவனம் குப்புசாமியைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் ஜெயந்தியிடம் கோபமாகப் பேசி இணைப்பைத் துண்டித்தாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த ஜெயந்தி குப்புசாமி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அவரது மகள்களை வீட்டில் அடைத்துவைத்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து ஜெயந்தி அபிராமபுரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பெண்களை மீட்டு இரு தரப்பினரிடமும் சமரசம் பேசி எழுதிவாங்கிக் கொண்டு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க...தன்பாலுறவை தட்டிக்கேட்ட தனியார் நிறுவன ஊழியர் வெட்டி கொலை: டிரைவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details