தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

மூவரை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்! கடன் தொல்லையால் கொடூர முடிவு! - chennai family suicide

திருவிக நகரில் கடன் தொல்லையால் மனைவி, மகள், மகன் என மூவரை கொலை செய்த ஒருவர், தானும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

chennai whole family suicide
chennai whole family suicide

By

Published : Oct 17, 2020, 7:59 PM IST

சென்னை: கடன் தொல்லையால் மனைவி, குழந்தைகளை கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை திருவிக நகர் வெற்றி நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் பழனி(47). இவருக்கு திருமணமாகி பவானி(40) என்ற மனைவியும், தேவதர்ஷினி (17), என்ற மகளும், பிரதீக்ஸ்(11) என்ற மகனும் இருந்துள்ளனர்.

இச்சூழலில் இன்று (அக்டோபர் 17) பகல் பழனி அவரது குடும்பத்தாறுடன் தற்கொலை செய்து கொண்டதாக திருவிக நகர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர், உள்புறம் பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நுழைவாயிலில் இரண்டு வயதுடைய நாய் இறந்து கிடந்தது.

பின்னர் காவலர்கள் படுக்கையறையில் சென்று பாரத்த போது, பவானி, அவரது பிள்ளைகள் தேவதர்ஷினி, பிரதீக்ஸ் ஆகியோர் படுக்கையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிரச்சியடைந்தனர். தொடர்ந்து இரண்டாவது மாடியில் சென்று சோதனை செய்த காவல் துறையினர், அங்கு பழனி தனது கைகளை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பழனியை மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அனைவரது சடலத்தையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லை காரணமாக பழனி தனது மனைவி, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details