தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

திருடுபோன செல்போன்களை மீட்ட காவல்துறை! - செல்போன் திருட்டு

சென்னை: மயிலாப்பூர் பகுதிகளில் திருடுபோன 160 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் காவல் துறையினர் இன்று ஒப்படைத்தனர்.

By

Published : Jan 11, 2020, 1:40 PM IST

மயிலாப்பூர் காவல் சரகத்தில் உள்ள மெரினா, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் 160 செல்போன்கள் தொலைந்துவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து துணை ஆணையர் சேகர் தேஷ்முக்கின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, ராயப்பேட்டை உதவி ஆணையர் பாஸ்கர், மயிலாப்பூர் உதவி ஆணையர் நெல்சன் மற்றும் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, சென்னையில் திருடப்பட்ட செல்போன்கள், கேரளாவில் உள்ள ஒரு முகவரிடம் விற்பனை செய்யப்பட்டது, ஐ.எம்.ஈ.ஐ எண் மூலம் தெரியவந்தது.

’செல்போன் மிக அவசியமான ஒன்று; அவற்றை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்’

இதனையடுத்து கேரளா சென்ற தனிப்படைக் காவல் துறையினர், 160 செல்போன்களையும் மீட்டுக்கொண்டு வந்து உரியவர்களிடம் இன்று ஒப்படைத்தனர். செல்போன் என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று எனவும், எனவே அவற்றை பத்திரமாகவும், கவனமாகவும் கையாள வேண்டும் என்றும் அப்போது அறிவுறுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திருடுபோன செல்போன் கிடைத்த மகிழ்ச்சியில் பேசிய அகிலா என்ற பெண், ” மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தீபாவளியின் போது தொலைந்த செல்போனை மீட்டுக்கொடுத்த காவல் துறையினருக்கு நன்றி “ என்றார்.

இதையும் படிங்க: மதுபோதையில் இளைஞர் பேச்சு: பொதுமக்கள் கும்மாங்குத்து

ABOUT THE AUTHOR

...view details