சென்னை டிபி சத்திரம் நியூ மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சற்குரு. வி.பாலசந்தர்(33). இவர் பாரதிய ஜனதா கட்சியில் மத்திய சென்னை மாவட்ட பட்டியலினத்தவர் அணி தலைவராக இருந்து வருகிறார்.
நேற்றிரவு (டிச. 21) இவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், பாஜகவில் பெரிய பொறுப்பில் இருந்தா பெரிய ஆளா நீ, பாஜக கட்சியிலிருந்து வெளியேறிவிடு இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி இணைப்பை துண்டித்துள்ளார்.