தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் நிலமோசடி புகாரை விசாரிக்க 3 அலுவலர்கள் நியமனம்!

By

Published : Dec 25, 2020, 2:47 PM IST

சென்னை: பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த நில மோசடி புகார் விசாரிக்க மூன்று அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்சென்னையில் நிலமோசடி புகார் 3 சிறப்பு அதிகாரிகள் நியமனம் விசாரனை நேர்மையாக நடக்குமா?
தென்சென்னையில் நிலமோசடி புகார் 3 சிறப்பு அதிகாரிகள் நியமனம் விசாரனை நேர்மையாக நடக்குமா?

தென் சென்னை மாவட்ட பதிவாளர் கட்டுப்பாட்டில், சைதாப்பேட்டை, தி.நகர், அடையாறு, விரும்பாக்கம், நிலாங்கரை, வேளச்சேரி, ஆலந்தூர், பல்லாவரம், பம்பல், குன்றத்தூர், தாம்பரம், சேலையூர், கூடுவான்சேரி, படப்பை, ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர் ஆகிய 18 சார்பதிவாளர் அலுவலகம் வருகிறது.

இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்சென்னை மாவட்ட பதிவாளராக இருந்து வருபவர் ரவீந்திர நாத். இவரது பணிக்காலத்தில் நிலமோசடி புகார் அதிகளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர் ஒரு தலைபட்சமாக நடந்தாக இவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இவரது கட்டுப்பாட்டில் வரும் அலுவலகங்களில் புகாரை விசாரிக்க பத்திரப்பதிவு ஐஜி சங்கர் மூன்று மாதங்களுக்கு விசாரணை நடத்த மூன்று சிறப்பு அலுவலர்களை நியமித்துள்ளார்.

அதன்படி மாவட்ட பதிவாளர்கள் நிர்வாகம், ஊட்டி செல்வநாரயணசாமி, செய்யார் சம்பத், விழுப்புரம் மலர்விழி ஆகிய மூன்று பேர் சென்னையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, தலா நூறு நிலமோசடி புகார்களை விசாரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்த விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் அலுவலர்கள், பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.

இதையும் படிங்க...பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details