சென்னை: காதலித்து ஏமாற்றிய காதலனுடன் தன்னை சேர்த்து வைக்க காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த பட்டதாரி பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அதே நிறுவனத்தில் ஜமீன் பல்லாவரம் ஜவ்வாது உசேன் தெருவைச் சேர்ந்த நைனார் முகமது(29) என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இவ்விருவரும் நட்பாக பழகி, நாளடைவில் காதலிக்கத் தொடங்கினர்.
தொடர்ந்து நெருக்கம் அதிகரிக்கவே, இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் குறித்து நைனார் முகமதுவின் தாய் ரபியாதுக்கு தெரியவந்துள்ளது. பின்னர் நைனார் முகமதுவை வேலைக்கு அனுப்பாமல் தாயார் வீட்டில் முடக்கியுள்ளார்.
இதையடுத்து நைனார் முகமது பத்து நாட்களாக வேலைக்கு வராததால், தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசமுடியவில்லை எனத் தெரிகிறது. இதனால் அவரது வீட்டிற்குச் சென்ற காதலி, காதலன் குறித்து அவரது தாயிடம் கேட்டுள்ளார். அப்போது, தனது மகன் வீட்டில் இல்லை என்றும், அவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து மகனின் காதலியை தகாத வார்த்தையில் திட்டி, ‘இங்கே இனி அவனை தேடி நீ வரக்கூடாது’ என்று கூறி விரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த காதலி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று, நைனார் முகமது தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக புகாரளித்துள்ளார். பின்னர் புகாரின் அடிப்படையில், நயினார் முகமதுவிடமும், அவரின் தாயாரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் காதலியிடம் இரண்டு நாளில் திருமணம் ஏற்பாடு செய்வதாகக் கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.