தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

கொலையில் முடிந்த மண உறவைத் தாண்டிய காதல்: நடிகை உள்பட 4 பேர் கைது! - Chennai extramartial affair actress arrested

சென்னை: திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவிலிருந்து திருந்தி திரும்பிவந்த துணை நடிகையிடம் தகராறில் ஈடுபட்டவரை கொலைசெய்ததற்காக அந்த நடிகை உள்பட நான்கு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

Chennai Illegal Affair Murder
Chennai Illegal Affair Murder

By

Published : Dec 31, 2019, 10:26 PM IST

சென்னை அருகேயுள்ள ராஜமங்கலம் பாரத் ராஜிவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் சங்கர். தேவி தமிழ் தொலைக்காட்சி நாடகங்களில் துணை நடிகையாக உள்ளார். தேவியின் சகோதரி லெட்சுமி, அவரது கணவர் சவாரியா. இவர்கள் நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்துவந்துள்ளனர்.

முன்னதாக வடபழனியில் வசித்தபோது தேவிக்கு, ரவி என்பவருடன் திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு ஏற்பட்டுள்ளது. அதன்பின், ரவியுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டு குடும்பத்தோடு ராஜமங்கலத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.

இதனையறிந்த ரவி நேற்று இரவு தேவி வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தேவி, சங்கர், லெட்சுமி, சவாரியா ஆகிய நான்கு பேரும் ரவியை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர்.

இதில், பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, தேவி உள்ளிட்ட நான்கு பேரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

கொலைசெய்யப்பட்ட ரவி

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் நான்கு பேரையும் கைதுசெய்து உயிரிழந்த ரவியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

கொலை வழக்கு: 9 நபர்களை குண்டர் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details