இந்தியா முழுவதும் கடந்த 32 ஆண்டுகளாக இயங்கிவரும் நிறுவனம் டி.எச்.எப்.எல் எனப்படும் தீவான் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம். இதில் முதியோர்கள் பலர் தங்களது ஓய்வூதியப் பணத்தைச் செலுத்தி வந்துள்ளனர். அந்தப் பணத்தை வட்டியுடன் சேர்த்து ஆண்டு இறுதியில் டி.எச்.எப்.எல் நிறுவனம் கொடுத்து வந்துள்ளது. இந்நிலையில் டி.எச்.எப்.எல் நிறுவனம் போலியாக பல நிறுவனங்களை வைத்து சுமார் 31 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக செய்தி வெளியானது.
மேலும், சில முதியோர்களின் தொகை அக்டோபர் மாதம் முதிர்வு அடைந்ததால் பணத்தை டி.எச்.எப்.எல் நிறுவனத்திற்குச் சென்று கேட்டுள்ளனர். ஆனால், டி.எச்.எப்.எல் நிறுவனம் 3 மாதங்களாக பணத்தைத் தராமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவசர காலம் மற்றும் மருத்துவ செலவுக்காகச் செலுத்திய பணத்தையும் இந்நிறுவனம் ஏமாற்றியுள்ளதாக முதியோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.