மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் தனியே நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து, அவர்களை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த இரண்டு இளைஞர்கள் அடுத்தடுத்து ஐந்து பெண்களிடம் கைவரிசை காட்டி, 15 சவரன் நகைகளை பறித்துச் சென்றுள்ளனர்.
அடுத்தடுத்து ஐந்து பெண்களிடம் 15 சவரன் செயின் பறிப்பு: கொள்ளையர்களுக்கு காவல் துறை வலைவீச்சு! - அலங்காநல்லூர் அருகே சாலையில் செயின் பிறளறஉ
மதுரை: வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
![அடுத்தடுத்து ஐந்து பெண்களிடம் 15 சவரன் செயின் பறிப்பு: கொள்ளையர்களுக்கு காவல் துறை வலைவீச்சு! Chain flush with five women in a row: Police crackdown on criminals!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8347192-thumbnail-3x2-aaa.jpg)
Chain flush with five women in a row: Police crackdown on criminals!
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த வாடிப்பட்டி காவல் துறையினர், அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் இரு இளைஞர்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளிகளின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.