தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

புதுச்சேரி பேராசிரியரிடம் நகைப்பறிப்பு: இளைஞர்களுக்கு வலைவீச்சு! - புதுச்சேரி பேராசிரியரிடம் நகைப்பறிப்பு

புதுச்சேரி: வீட்டருகே நடந்து சென்ற பேராசிரியையிடம் நகை பறித்த அடையாளம் தெரியாத இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

Chain snatching in Puducherry: police inquired
Chain snatching in Puducherry: police inquired

By

Published : Jan 10, 2021, 6:39 PM IST

புதுச்சேரி பாக்கமுடையான்பேட் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் சுந்தரமூர்த்தி, நேற்றிரவு (ஜன. 9) தனது வீட்டருகே நடந்து சென்றார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்கள் இருவர், சுந்தரமூர்த்தியின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இது குறித்து அவர் புதுச்சேரி கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அடையாளம் தெரியாத இளைஞர்களை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க...சூப்பர் மார்க்கெட்டின் மேற்கூரை பிரித்து ரூ. 21 ஆயிரம் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details