சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் லஷ்மி. இவர், ரெட்டேரி அடுத்த விநாயகபுரம் தலைமைச் செயலக காலனியில் வீட்டு வேலை செய்துவருகிறார். வழக்கம் போல் இன்று பணியை முடித்து விட்டு, அங்குள்ள மளிகை கடை ஒன்றில் பொருள் வாங்குவதற்காக சென்றார். அப்போது தலைகவசம் அணிந்த இளைஞர் ஒருவர், லஷ்மியின் கழுத்தில் இருந்த நகையை பறித்து இழுத்தார். இதில் நிலை தடுமாறிய அந்த பெண், கீழே விழுந்து காயமடைந்தார்.
அதன்பின் அந்த அடையாளம் தெரியாத நபர், நகையை பறித்து இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக புழல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், காயமடைந்த லஷ்மியை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.