தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

சோகத்தில் முடிந்த செல்ஃபோன் உரையாடல் - கிணற்றில் தவறி விழுந்த பெண்! - Cellphone conversation that ended in tragedy

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வீட்டின் அருகே கைபேசியில் பேசியபடியே சென்ற பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Cellphone conversation that ended in tragedy
Cellphone conversation that ended in tragedy

By

Published : Sep 27, 2020, 7:18 PM IST

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த குட்டகந்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தியின் மனைவி லக்ஷனா (21). இந்நிலையில் லக்ஷனா நேற்றிரவு (செப். 26)11.30 மணியளவில் தனது வீட்டின் அருகேயுள்ள நிலத்தில், தனது உறவினர்களுடன் கிணற்றின் அருகே அமர்ந்து கைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார்,

அப்போது லக்ஷனா திடீரென நிலை தடுமாறி 90 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இரவு நெடுநேரம் ஆகியும் தனது மனைவி வீட்டில் இல்லாததை அறிந்த அவரது கணவர் திருமூர்த்தி, அவரை தேடியபோது, கிணற்றில் விழுந்து தனது மனைவி உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இச்சூழலில் உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடலை மீட்டுள்ளனர். பின்னர் இதுகுறித்து உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details