கடந்த ஜூன் மாதம் சாத்தான் குளத்தைச் சேர்ந்த தந்தை-மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர். காவல் உதவி ஆய்வாளர்கள், ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர்கள் முருகன், முத்துராஜா, சிறப்புக் காவல் ஆய்வாளர் பால் துரை, காவலர்கள் துரை, வெயில் முத்து மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய பத்து பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் தந்தை, மகன் இருவருமே காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இருவரது உடலில் இருந்தும் ரத்தம் சொட்ட, சொட்ட, காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இருவரையும் காவல் நிலையத்தில் ஒரு டேபிளில் படுக்க வைத்து பின்புறத்தில், லத்தி, கம்பு போன்றவற்றால் மிருகத்தனமாக கடுமையாக தாக்கியுள்ளனர்.
ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு முறையாக சிகிச்சை அளிக்காமலேயே கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இதனாலேயே இருவரும் உயிரிழந்தனர். இந்த தகவல்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர்கள் பியூலா மற்றும் ரேவதியின் வாக்குமூலத்தை வைத்து சிபிஐ குற்றப்பத்திரிகையில் பதிவு செய்துள்ளது.
இருவரது ஆடைகளையும் கலைத்து காவல் நிலையத்தில் இருந்த டேபிளில் பின்புறமாக படுக்க வைத்து 3 காவல்துறையினர் பிடித்துக்கொள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முத்துராஜா ஆகியோர் கடுமையாக தாக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது .இதற்காக அவரது ஆடைகளில் ரத்தம் சொட்டச்சொட்ட அளித்துள்ளதாகவும் மேலும் அவர்களின் உடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களை கடுமையாக தாக்கப்பட்டதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை மறைத்து காவல்துறையினர் மருத்துவச் சான்றிதழ் பெற்று இவ்வாறு கோவில்பட்டி சிறையில் அடைந்துள்ளதாகவும் காவல்துறையினர், கடுமையாக தாக்கி தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று அந்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப்பில் சரக்கு ரயில்கள் சேவை பாதிப்பு!