கொல்கத்தா: பல கோடி சிட் நிதி மோசடி தொடர்பாக ரோஸ் வேலி குழுமத்தின் தலைவர் கௌதம் குண்டுவின் மனைவி சுப்ரா குண்டுவை மத்திய புலனாய்வுத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை கைது செய்ததாக சிபிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சுப்ரா குண்டு மீது போன்ஸி (சிட் பண்ட்) ஊழலில் ஈடுபட்டதாக புகார் உள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐயின் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் இன்று (ஜன.15) அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவரை சிபிஐ பொருளாதார குற்றப்பிரிவு அலுவலர்கள் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆக அவரை அமலாக்கத்துறை அலுவலர்களும் கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.