ஒண்டிப்புதூர் பகுதியில் ஆவின் பாலகம் ஒன்றுள்ளது. அது 24 மணி நேரமும் செயல்படும் கடையாகும். வியாழக்கிழமை இரவு பணியில் தேவதாஸ் என்ற 70 வயது முதியவர் கடையில் இருந்துள்ளார்.
இவ்வேளையில் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் சற்று அவர் உறங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர், முதியவர் உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு கடைக்குள் நுழைந்து கல்லா பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து முதியவர் கண் திறந்து பார்க்கையில் கல்லா பெட்டி இல்லாதது தெரியவந்தது. அதன்பின் அங்குள்ள சிசிடிவியின் பதிவுகளை சோதனை செய்ததில் ஒரு நபர் வந்து கல்லாப்பெட்டியையே எடுத்து சென்றது அதில் பதிவாகி இருந்தது.
கடையில் வைத்திருந்த கல்லாபெட்டி திருட்டு: சிசிடிவி பதிவுகள் கல்லாப்பெட்டியில் 4000 ரூபாய் பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கடையின் மேலாளர் அளித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல்துறையினர் கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.