தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

தேர்வு முறைகேடு - ஜெயக்குமாரையும் ஓம் காந்தனையும் ராமேஸ்வரம் அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு! - தேர்வு முறைகேடு

சென்னை: குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஆறு நாள்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர் ஒம்காந்தன் ஆகிய இருவரையும் ராமேஸ்வரம் கூட்டிச் சென்று விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

scam
scam

By

Published : Feb 20, 2020, 1:43 PM IST

குரூப்-4, குரூப்-2 தேர்வு முறைகேட்டில் ஏற்கெனவே காவலில் எடித்து விசாரிக்கப்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார், அரசு ஊழியர் ஒம்காந்தன் ஆகிய இருவரையும், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாகவும் ஆறு நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

இதையடுத்து, சிபிசிஐடி காவல்துறையினர்இருவரையும் தேர்வு முறைகேடு நடந்த மையமான ராமேஸ்வரத்துக்கு, இன்று மாலை சென்னையிலிருந்து அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப்-2ஏ விவகாரத்தில் ஜெயக்குமாரும் ஓம் காந்தனும் எத்தனை நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக அரசுப் பணியில் சேர்த்துள்ளனர் என்பது குறித்தும், தற்போது அவர்கள் எந்த ஊரில், என்ன பணியில் இருக்கிறார்கள் என்ற பட்டியலும் தயாரிக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் படிங்க: 8,888 சீருடைப் பணியாளர்கள் தேர்வு நடைமுறையை நிறுத்திவைக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details