மூன்று ஹெக்டேர்வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் கிசான் நிதி உதவி திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கி வந்தது.
இந்நிலையில், விவசாயிகள் அல்லாதோர் பலர் போலி அடையாள அட்டைகளை கொண்டு இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக புகார்கள் வந்தன. குறிப்பாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ஆறு லட்சம் போலி விவசாயிகள் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 110 கோடி ரூபாய்வரை மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த வழக்கை சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலிப் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கபட்டு விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இத்திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை வேளாண் துறையிடம் உள்ள மூன்று ஹெக்டேர் நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகள் பட்டியலோடு ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி நடந்துவந்தது. அதன் மூலம் விவசாயிகள் அல்லாத யாரெல்லாம் பணம் பெற்று வந்தனர் என கண்டுபிடிக்கப்பட்டு அந்த பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி கைது நடவடிக்கை தீவிரமடையும் எனவும், இதுவரை 60 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவு சிபிசிஐடி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கிசான் திட்ட போலி விவசாயிகள்- விரட்டும் சிபிசிஐடி ! - போலி விவசாயிகள்
சென்னை: கிசான் திட்டத்தில் மோசடியாக பணம் பெற்ற போலி விவசாயிகள் யார் யாரென வேளாண்துறை, சிபிசிஐடியிடம் பட்டியல் ஒப்படைத்துள்ளது.
சிபிசிஐடி விசாரணை
அதே போல, இந்த மோசடி தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சிபிசிஐடியிடம் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த ஆறு நாட்களில் மட்டும் 300 தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.