கண்ணூர் (கேரளா): கேரளா மாநிலம் கண்ணூரில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அரளம் தொட்டுகடவு எனும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ் கொடி கம்பத்தில் இருந்த காவி கொடிக்கு கீழே இந்திய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மூவர்ண கொடியை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.