திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் ( 28). கார் ஓட்டுநரான இவரது வீட்டிற்கு நேற்று இரவு சதீஷ் என்பவர் வந்து அவரை வெளியே அழைத்து சென்று கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.
கார் ஓட்டுநர் கத்தியால் குத்திக்கொலை - Latest Thiruvallur news
திருவள்ளூர்: கார் ஓட்டுநரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கொலையாளியை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்
![கார் ஓட்டுநர் கத்தியால் குத்திக்கொலை Car driver stabbed to death at Pudusathiram in Thiruvallur](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-05:32:14:1607860934-tn-trl-01-murdar-vis-scr-tn10036-13122020165642-1312f-1607858802-414.jpg)
Car driver stabbed to death at Pudusathiram in Thiruvallur
அசோக்குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த தகவலறிந்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் வெள்ளவேடு காவல் துறையினர் சதீஷின் தந்தை ராஜா, சகோதரன் முத்து ஆகியோரை கைது செய்தனர். கொலை செய்த சதீஷை தேடி வருகின்றனர். மேலும் அசோக்குமாரின் உடலை கேட்டு, உறவினர்கள் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.