செங்கல்பட்டு நத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் ஈசாக், திலகம், மாரியம்மாள். இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள காலி மது பாட்டில்கள் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் வழக்கம் போல் பணிக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது மதுராந்தகம் அருகேவுள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்தபோது, சென்னை நோக்கி வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அவர்கள் மூவரும் தூக்கிவீசப்பட்டனர், ஈசாக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.