வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சான்றோர் குப்பம் பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக மைசூரிலிருந்து தேங்காய் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த லாரி திடீரென ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, லாரி எதிர்பாரதவிதமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதில் கார் தூக்கி வீசப்பட்டு சாலையோரம் நின்று கொண்டிருந்த பாலன் என்பவர் மீது விழுந்து நொறுங்கியது. இதில் பாலன் பலத்த காயம் அடைந்தார். காரின் உள்ளே இருந்த இருவரை படுகாயங்களுடன் அப்பகுதி மக்கள் மீட்டு அவசர ஊர்தி மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.