தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ரூ.3.56 கோடி கஞ்சா பறிமுதல்; வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதிரடி! - Ganja worth Rs 3.56 crore seized by DRI

ரூ.3.56 கோடி மதிப்புள்ள 1,427 கிலோ கஞ்சாவை கடத்திவந்த சரக்கு வாகனத்தை வருவாய் புலனாய்வு அலுவலர்கள் மடக்கிப் பிடித்தனர். இது தொடர்பாக வாகன ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

3.56 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்
3.56 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

By

Published : Aug 22, 2020, 7:23 PM IST

தெலங்கானா: சுமார் 3.56 கோடி ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத கஞ்சாவை வருவாய் புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சரக்கு வாகனம் மூலம் ஆந்திர பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரியிலிருந்து, உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு சரக்கு வாகனம் மூலம் கடத்த முயற்சிக்கும்போது அலுவலர்கள் இதனை மடக்கிப் பிடித்துள்ளனர்.

3.56 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

மொத்தம் 1,427 கிலோ கஞ்சா மூட்டைகள் சரக்கு வாகனத்திலிருந்து கைப்பற்றப்பட்டது. வாகனத்தை இயக்கிய ஓட்டுநரை அலுவலர்கள் கைதுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.

சொத்துக்காக தந்தையை ஓட ஓட விரட்டி கொலைசெய்த மகன்

சரக்கு வாகனத்தில் இதற்கென்று ஒரு அறை அமைத்து கடத்தலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்துள்ளது. இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்று, பந்தாங்கி நெடுஞ்சாலை சுங்கச் சாவடியில் வைத்து வாகனத்தை வழிமறித்து வருவாய் புலனாய்வு அலுவலர்கள் விசாரித்ததில் இந்த கடத்தல் சம்பவம் அம்பலமாகியுள்ளது

3.56 கோடி ரூபாய் கஞ்சா பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details