மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குள்பட்ட மேலஅனுப்பானடி பகுதியில் கஞ்சா விற்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் காளீஸ்வரன் (24) சட்டவிரோதமாக கஞ்சா விற்பதாக அவனியாபுரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை: ஒருவர் கைது - madurai cannabis sale
மதுரை: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
cannabis sales accused arrested in madurai
இதனையடுத்து அவனியாபுரம் சார்பு ஆய்வாளர் அதிகுந்த கண்ணன் தலைமையில் காவல் துறையினர் விரைந்துசென்று சட்டவிரோதமாக கஞ்சா விற்ற நபரை கைதுசெய்னர். மேலும், அவரிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.