மதுரை பிபிகுளம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்க்கிற்கு நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பெட்ரோல் நிரப்ப முயன்ற போது தீடீரென அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது.
பெட்ரோல் பங்க்கில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் - Burned bicycle
மதுரை: மருத்துவமனைக்கு அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனம் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் பங்க்
இதைப் பார்த்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தியணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனத்தை ஆய்வு செய்தனர். மருத்துவமனைக்கு அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.