நாமக்கல் எருமப்பட்டி மாணிக்கவேலூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ். இவர் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு பணிக்கு சென்றுவிட்டு, இருதினங்களுக்கு முன்பு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு எட்டு மணியளவில் தனது மனைவி கெளரி, ஒன்றரை வயது மகன் புகழ்வன் ஆகியோருடன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, மூவரும் சரமாரியாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில், உயிருக்கு போராடிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், மூவரையும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் கெளரி, குழந்தை புகழ்வன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயமைடந்த சுரேஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.