தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

அதிவேகமாக வந்த கார் மோதி சிறுவன் மரணம் - சின்னசேலம் காவல்துறை விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே சாலையோரமாக நின்ற சிறுவன் மீது கார் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

children
children

By

Published : Dec 26, 2020, 4:36 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அம்மையகரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் பிரகதீஸ்வரன். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று தனது தந்தையுடன் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே தந்தையுடன் நின்று பேசிக்கொண்டிருந்த போது, அவ்வழியே சேலத்திலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த கார் சிறுவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு சிறுவனின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து சின்னசேலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அழகிரியை தவிர்த்துவிட்டு திமுக ஆளுங்கட்சியாக வர முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details