சேலம் மாவட்டம் சீரகாபாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவர் சேலம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டருகே நிறுத்தியிருந்த இவரது காரை இளைஞர் ஒருவர் உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார். இதனை நேற்று காலை பார்த்த சிவப்பிரகாசம் அதிர்ச்சி அடைந்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .
பாஜக பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய வாலிபருக்கு வலைவீச்சு..! - police search the person
சேலம்: பாரதிய ஜனதா கட்சி பிரமுகரின் காரை அடித்து நொறுக்கிய இளைஞரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை கைப்பற்றி விசாரணை செய்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காரை சுற்றி இருப்பதும் இளைஞர் ஒருவர் மட்டுமே காரை அடித்து உடைத்து சேதப்படுத்தியதும் தெரியவந்தது . பின்னர் அந்தக் காரை சேதப்படுத்திய இளைஞர் குறித்து விசாரணை செய்தபோது, அவர் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் என்றும் அவர் தலைமறைவாகியிருக்கிறார் என்றும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி காவல்துறையினர், "பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சிவப்பிரகாசம் தனது காரை எப்போதும் பொதுமக்கள் வந்து செல்லும் பாதையில் நிறுத்தி வைப்பதால், அந்த வழியே மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதுகுறித்து அவரிடம் பொதுமக்கள் பலர் தெரிவித்தும் சிவப்பிரகாசம் காரை ஓரமாக நிறுத்தாமல் தொடர்ந்து பாதை மீதே நிறுத்தி வந்துள்ளார். இதில் கோபம் அடைந்த மோகன்குமார் நள்ளிரவில் காரை உடைத்து சேதப்படுத்தினார்" என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக தெரிவித்தனர்.