தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை: போலீஸ் வலைவீச்சு! - In Thiruvallur BJP leader's Home Robbery

திருவள்ளூர்: பாஜக பிரமுகர் வீட்டில் 200 சவரன் தங்க நகை கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை
பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை

By

Published : Jan 10, 2020, 6:11 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன். இவர் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்று திரும்பியுள்ளார்.

இந்நிலையில் திரும்பி வந்த ஜானகிராமன், வீட்டின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 200 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து ஜானகிராமன் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி தலைமையில் விசாரணை மேற்கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

ஜானகிராமன் மனைவி உஷாவின் 40 சவரன் தங்க நகை, லண்டனில் உள்ள மகள் சாம்பவியின் நகைகள் 100 சவரன், அமெரிக்காவில் வசிக்கும் அவரது மருமகள் தீபாவின் 60 சவரன் தங்க நகைகள் தனித்தனியாக மூன்று பீரோக்களில் இருந்தது கொள்ளை போனது.

பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளை

இதையும் படிங்க: இந்தாண்டு கட்சி தொடக்கம் - நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details