கோவை மாவட்டம் மதுக்கரை பகுதி முஸ்லீம் காலனியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(75). அவருக்கு சொந்தமாக அந்தப் பகுதியில் மூன்று செண்ட் இடம் உள்ளது.
அதில் ஓட்டு வீடு ஒன்றைக் கட்டி வசித்து வந்துள்ளார். அவருக்கு மகன், மகள் என இரண்டு வாரிசுகள் இருக்கின்றனர். மகன் வெளியூரில் வசித்து வருகிறார். மகள் திருமணமாகி கணவரைப் பிரிந்து அவரது குழந்தையுடன் கண்ணாம்மாள் வீட்டிலேயே வாழ்ந்துவருகிறார்.
இவர்கள் பல நாள்களாக அதே பகுதியில் வசித்துவரும் பாஜகவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மளிகைக் கடையில் கடனுக்கு மளிகை சாமான்கள் வாங்கி வந்துள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு மளிகை சாமான்களின் கடன் மதிப்பு அதிகமானதாக கூறி அந்த கணக்கிற்கு உங்கள் மூன்று செண்ட் இடத்தில் ஒரு செண்ட் இடத்தை ஒரு லட்சம் ரூபாய்க்கு போக்கியத்திற்கு கேட்டுள்ளார்.
இதற்கு குடும்பத்தாரிடம் கேட்டு கூறுவதாக கண்ணம்மாள் கூறியுள்ளார். ஆனால் போக்கியத்திற்காக தான் என்றும் இதில் பிரச்னை ஏற்படாது என்றும் கூறி கண்ணம்மாளை அழைத்து சென்று சார்பதிவாளர் அலுவலகத்தில் கை நாட்டி வாங்கி விட்டு 50,000 ரூபாய் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆறுமுகம், கண்ணாம்மாளிடம் உங்கள் ஒரு செண்ட் இடத்தை நாங்கள் வாங்கி விட்டோம் ஒரு வாரத்திற்குள் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
போக்கியத்திற்கு ஒரு லட்சம் என்று கூறி, வெறும் ஐம்பதாயிரம் மட்டுமே அளித்திருந்த நிலையில், மேலும் இரு செண்ட்டையும் வாங்கிக் கொண்டதாகக் கூறி ஐம்பதாயிரத்தை அளித்து அவர்களது குடும்பத்தை வெளியேறுமாறு மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி மற்றும் மகள் மற்றும் பேத்தி ஆகியோர் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர்.