தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை! - பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சென்னை: பெண் தொழிலாளரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த தனியார் வங்கி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

imprisonment
imprisonment

By

Published : Nov 19, 2020, 1:43 PM IST

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி, வீட்டிற்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கொலை செய்து விடுவதாக மிரட்டியும் வந்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வேப்பேரி மகளிர் காவல் நிலையத்தில் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, சுரேஷ் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இதையும் படிங்க: போதை தலைக்கேறி பேருந்தை மறித்த ஆசாமி!

ABOUT THE AUTHOR

...view details