கடந்த 2014-2019இல் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினராக இருந்தவர் கே.என். ராமச்சந்திரன். கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரான இவர், அந்த அறக்கட்டளையின்கீழ் இயங்கும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியை விரிவாக்கம் செய்ய, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற ராமச்சந்திரன் விண்ணப்பித்துள்ளார்.
அப்போது, விண்ணப்பத்தை பரிசீலிக்க, தனக்கும் குடும்பத்தாருக்கும் அமெரிக்கா சென்றுவர விமான கட்டணமாக இரண்டு லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை பெற்ற மேலாளர் தியாகராஜன், 20 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, வங்கி மேலாளர் தியாகராஜன், கல்லூரித் தலைவர் ராஜசேகரன் (ராமச்சந்திரன் மகன்), அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ராமச்சந்திரன் ஆகியோர் மீது 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.