திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (35). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தாட்சர் (32) என்பருக்கும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
ஆனால், திருமணமான நாளிலிருந்தே தனது மனைவியுடன் நெருங்கி பழகுவதை எட்வீன் ஜெயக்குமார் தவிர்த்து வந்தார். இதனையடுத்து கணவர் மீது சந்தேகமடைந்த தாட்சர் கணவரின் பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் பத்திற்கும் மேற்பட்ட கைபேசிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச காணொலிப் பதிவுகள் இருந்தன.
இது குறித்து தஞ்சாவூர் டிஐஜி லோகநாதனிடம் பிப்ரவரி மாதம் எட்வின் ஜெயக்குமாரின் மனைவி புகார் கொடுத்தார். இந்த புகாரை மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து, ஆறு மாதத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்த எட்வின் ஜெயக்குமாரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த எட்வின் ஜெயக்குமாரை நேற்று (செப்டம்பர் 10) தனிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
மேலும் அவரை கைபேசியில் உள்ள ஆபாச காணொலிப் பதிவில் உள்ளவர்கள் அங்கு அவருடன் பணி புரிந்தவர்களா? அல்லது வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களா? என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.