நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு இன்று (அக்.16) விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேரும் ஆஜராகினர்.
ரயில்வே ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் சம்பவத்தன்று உயிரிழந்த ஓம் பகதூரின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர் அன்வருதீன் ஆகிய இருவர் சாட்சியம் அளித்தனர்.
நான்கு பேருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் இந்நிலையில், நீதிபதி பி.வடமலை சிறையில் உள்ள ஜித்தின் ஜாய், உதயன், பிஜின் குட்டி, மனோஜ் சாமி ஆகிய நான்கு பேருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:'கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது"- கண் கலங்கிய நீதிபதி கிருபாகரன்!