வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த 9 மற்றும் 7 வயதுடைய சிறுமிகளை சித்தப்பா உறவு கொண்ட ஆட்டோ ஓட்டுநர், 2019ஆம் ஆண்டு மிரட்டல் விடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து, அவரை கைது செய்த தோட்டப்பாளையம் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 21 ஆண்டுகள் சிறை - வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம்
வேலூர்: தோட்டப்பாளையம் பகுதியில் சிறுமிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21_years_sentence
இது தொடர்பான வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி இன்று (டிசம்பர் 29) தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத் தொகை 2000 ரூபாயை கட்டத் தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, குடியாத்தம் கிளைச் சிறையில் ஆட்டோ ஓட்டுநர் அடைக்கப்பட்டார்.