திருவள்ளூர்:ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்துவந்தவர் சுதன்(41). இவர், மவுண்ட் பகுதியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார்.
இன்று (டிச.8) சுதன் பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோவர்த்தனகிரி பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, சாலையில் முன்னால் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனர் திடீரென்று பிரேக் போட்டுள்ளார்.
இதனையடுத்து, சுதனும் பிரேக் போட்டு தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், சுதனின் பின்னால் வேகமாக வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது. இதில், பஸ்ஸூக்கும் ஆட்டோவுக்கு இடையில் சிக்கிய சுதன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.