தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

ஈரோடு: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி

By

Published : May 31, 2019, 8:14 AM IST

ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியின் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வங்கியின் முன்பாக ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பணம் செலுத்தவும் எடுக்கவும் வசதி உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு ஏடிஎம் அறையில் தலைக்கவசம் அணிந்தபடி நுழைந்த கொள்ளையன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் முன்பகுதியை மட்டுமே உடைக்க முடிந்ததால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனிடையே வழக்கம் போல இன்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஏடிஎம்-மில் கொள்ளை முயற்சி - கண்காணிப்பு படக்கருவியில் பதிவான காட்சிகள்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூரம்பட்டி காவல்துறை கண்காணிப்பு படக்கருவியில் பதிவாகியிருந்த கொள்ளையனின் அடையாளத்தை கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details