மேற்கு மெக்ஸிக்கோ உரப்பன் (Uruapan) நகரில் கடந்த திங்கட்கிழமை வீடியோ கேம்ஸ் மையம் ஒன்றில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் மூன்று சிறுவர்கள், இரு இளைஞர்கள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு காவலர் கொல்லப்பட்டார் மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர் இதன் தொடர்ச்சியாக வீடியோ கேம்ஸ் மையத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்று நடந்த தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.