அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்சீனாவுக்கு அஜிதா, ரஜிதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மற்றும் இரண்டாவது கணவர்களை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த மர்சீனா, கடந்த 10 நாட்களாக தனது மூன்றாவது கணவர் அமீது என்பவருடன் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவர் அமீது மற்றும் இரண்டு குழந்தைகளோடு நேற்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மர்சீனா படுத்துறங்கியுள்ளார். கண் விழித்துப் பார்க்கும்போது, இரண்டாவது குழந்தையான ரஜிதா அங்கில்லாதது கண்டு அதிர்ச்சியடந்த மர்சீனா, ரயில் நிலைய காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் மேற்கொண்ட விசாரணையில், மூன்றாவது கணவர் அமீதுக்கும் அவரது நண்பருக்கும் ஏற்பட்ட தகராறில், அவரது நண்பர் ரஜிதாவை தூக்கிச் சென்றதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது அமீது, அவரது நண்பர் மற்றும் குழந்தை ரஜிதாவை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.