தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

'மை' தடவி பெண் போலீஸூக்கு பாலியல் தொல்லை! - கமிஷனரிடம் புகார் - பெண்ணிடம் எல்லை மீறல்

மதுரை: குடும்ப பிரச்னையை சரிசெய்ய சென்ற பெண் காவலருக்கு, மை தடவி பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபர்களை கைது செய்யக்கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சந்தானலட்சுமி

By

Published : Jul 6, 2019, 10:07 PM IST

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியைச் சேர்ந்த சந்தானலட்சுமி என்பவர், தல்லாகுளம் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு பெண்ணும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, இருவரும் ஒன்பது ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கணவர் தரப்பில் விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து, தனது சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரான பூமிநாதன் என்பவர் கணவன் - மனைவி பிரச்னையை தீர்த்துவைப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பூமிநாதன், ஆறுமுகம், ஜோதி ஆகியோர் இவரிடமிருந்து இது தொடர்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாகப் பணத்தை பெற்றிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

தான் ஏமாற்றப்படுவதை அறிந்த சந்தானலட்சுமி, தன்னை பாலியல் ரீதியாக பிரச்னை செய்ததோடு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், அந்நபர்கள் மீது புகார் மனு அளித்தார். இம்மனுவில் ‘நேற்றைய தினம் என்னைத் தொடர்புகொண்ட பூமிநாதன் கேரளா சென்று, மதுரையில் உள்ள சாமியார் ஜோதி என்பவர் மூலமாகப் பூஜை நடத்தினால் கணவருடனான பிரச்னை தீர்க்கமுடியும் அதற்காகக் கணவர் பயன்படுத்திய சட்டை, காலடி மண் ஆகியவற்றை எடுத்துவரவேண்டுமென அழைத்தார்.

தொடர்ந்து சாத்தியரைச் சந்தித்த பின்னர், பூஜை பொருட்கள் வாங்க வேண்டும் எனக் கூறி சாமியார் ஜோதி என்பவருடன் கீழமாசி வீதி பகுதிக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அவருடன் ஆறுமுகம் என்பவரும் இருந்துள்ளார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது கையில் உள்ள மையைத் தடவினால் பிரச்னை தீரும் எனக் கூறி, கையில் மையைத் தடவினர். இதனால் மயக்கமடைந்து, பின் ஒரு மணி நேரம் கழித்து நான் எழுந்த நிலையில் உடைகள் கலைந்து கிடந்தன.

பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபர்களை கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்த சந்தானலட்சுமி

அதனைத் தொடர்ந்து, நான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை உணர்ந்தேன். இதனால் கோபமடைந்த நான் பூமிநாதனை அடித்துவிட்டுச் சென்ற நிலையில், பூமிநாதனின் தந்தை தரப்பிலிருந்து தொலைப்பேசி மூலமாகக் கொலை மிரட்டல் வந்தது. எனவே, என்னை இந்நிலைக்கு ஆளாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details