சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காமராஜபுரத்தில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சார் பதிவாளராக தினேஷ் ராகவன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வரும் இந்த அலுவலகத்தில், பத்திரப்பதிவு, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பத்திரப்பதிவு செய்ய வந்தவரிடம் அலுவலர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளார்.