ராமநாதபுரம்:அங்கோடா லொக்காவைத் தெரிந்த நபரை ராமேஸ்வரம் காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செப்டம்பர் 5ஆம் தேதியன்று கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து ஒரு நபர் ராமேஸ்வரம் மண்டபம் பகுதிக்கு படகில் வந்துள்ளார்.
மண்டபத்தில் இருந்தவர்களிடம் சிங்கள் மொழியில் கைபேசி கேட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது சந்தேகம் எழுந்த நிலையில் அங்குள்ளவர்கள் ராமேஸ்வரம் மண்டபம் காவலர்களுக்கு தகவலளித்தன் பேரில் மண்டபம் காவல் துறையினர் இவரை கைது செய்து செய்து விசாரித்த நிலையில், புலனாய்வுப் பிரிவினரும் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர் பெயர் பிரதீப்குமார் பண்டாரக்கா(31) என்று தெரியவந்தது. இவர் இலங்கையில் உள்ள கொழும்பு நீலக்கட்டா காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் என்று தெரியவந்தது.
மேலும், இவர் இலங்கையிலுள்ள துறைமுகத்தில் போதை பொருளை கடத்தி வருபவர்களுக்கு உதவுதும், இவரும் போதை பொருளை வாங்கி தெரிந்தவர்களிடம் அளித்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இவர் இலங்கையில் தேடப்பட்டு வந்ததும், எனவே அங்கிருந்து கள்ளத்தனமாக படகு ஒன்றில் தப்பி ஓடி வந்ததும் தெரியவந்தது.
உளவு பார்க்க வந்தாரா இலங்கை காவலர் - தீவிர விசாரணையில் புலனாய்வு அலுவலர்கள்!
போதை பொருள் கடத்தல் வழக்கு என்பதால் ராமேஸ்வரம் காவல் துறையினர் அங்கோடா லொக்கா வழக்கில் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகித்து அங்கோடா லொக்கா படத்தை காண்பித்து இவரை தெரியுமா? என்று கேட்கையில் தெரியும் என்று கூறியுள்ளார். இது குறித்து ராமேஸ்வரம் காவல் துறையினர் கோவை சிபிசிஐடிக்கு தகவலளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் சிபிசிஐடி கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான குழுவினர் இரு தினங்களுக்கு முன் புழல் சிறையில் இருந்த பிரதீப்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கோடா லொக்காவை தனக்கு தெரியும் என்றும் அவர் பெரிய போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் என்றும் ஆனால் நான் சிறிய அளவில் போதை பொருளை கடத்தி வியாபாரம் செய்பவன் என்றும் கூறியிருக்கிறார்.
சட்டவிரோதமாக தனுஷ்கோடி வந்த இலங்கை காவலர்: புழல் சிறை அடைப்பு
இதனையடுத்து பிரதீப் குமார் பண்டாரக்கா குறித்து இலங்கை காவல் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. அங்கோடா லொக்கா குறித்து ஏதேனும் பிரதீபிடம் இருந்து தெரிய வேண்டுமென்றால், காணொலி மூலமாகவோ, தேவைப்பட்டால் உயர் அலுவலர்களின் அனுமதியுடனோ கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.