தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / jagte-raho

காவல் துறை டிஜிபி மகனின் ஐ-பேட் திருட்டு! - ஐ-பேட் திருட்டு

சென்னை: ஆந்திர மாநில காவல் துறை இயக்குனர் மகனின் விலையுயர்ந்த ஐ-பேட் திருடு போயுள்ளது.

theft
theft

By

Published : Mar 13, 2020, 4:11 PM IST

ஆந்திர மாநில காவல் துறை இயக்குனராக இருப்பவர் அச்சுனந்த தாஸ். இவரது மகன் சுப்ரத் (38) அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேலாளராக பணியில் உள்ளார். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி சென்னை வந்த சுப்ரத், அண்ணா சாலையில் உள்ள தாஜ் கிளப் ஹவுஸ் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.

நேற்று அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வாடகை கார் மூலமாக விடுதிக்கு திரும்பியுள்ளார். அறைக்கு வந்த சிறிது நேரம் கழித்து, தனது விலை உயர்ந்த ஐ-பேட் காணாமல் போனது அவருக்கு நினைவிற்கு வந்தது. பின்னர் அவர் கார் ஓட்டுநருக்கு தொலைபேசி மூலம் தகவலைச் சொல்ல, காரில் ஐ-பேட் இல்லை என கார் ஓட்டுநர் கூறியுள்ளார்.

பின்னர் இதுகுறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் சுப்ரத் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வாடகைக் கார் ஓட்டுநர் நாகராஜனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 17 காவலர்கள் பணியிடை நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details